அண்ணே.. அண்ணே...! ஸ்டாலின் அண்ணே...! பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...! வீடியோ உள்ளே...!

சென்னை ராயபுரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை ராயபுரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடந்த 23-ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் வீடுகள் முன்பதாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், சென்னை ராயபுரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘அண்ணே அண்ணே.. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு… இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே… அத சொன்னா வெட்கக்கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு’ என பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

unknown node