இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்திற்கு சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியது.மேலும்,அவர் கப்பல் மூலமாக வெளிநாடு தப்பிச் சென்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியது.ஆனால்,அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில்,கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில்கோத்தபயராஜபக்சேதஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து இருந்த நிலையில்,கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து எப்படித் தப்பிச் சென்று இருப்பார் கேள்வி எழுந்த நிலையில்,அங்கு இருந்த ரகசிய சுரங்கப் பாதையைப் பயன்படுத்தியே அவர் தப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே,இலங்கையில்,தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.