இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுக்கொண்டார். தினேஷ் குணவர்தனவுக்கு, அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி […]
இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன தவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன நாளை பிரதமராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை நாட்டின் 8வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் 134 எம்பிக்களின் […]
இலங்கையில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு. இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம். மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச இருவரும் வரும் 28-ஆம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு ராஜபக்சக்களும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இந்த பரபரப்பான […]
பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு. இலங்கை பொருளாதார நெருக்கடி – தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டு வந்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு, உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. […]
இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் தீர்மானமும் தாக்கலாவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டார். இலங்கை […]
இலங்கை:பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. மேலும்,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. பிரதமர் பதவி விலகலா?: இதனால்,அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச […]