உளவு பார்க்கும் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

A petition has been filed in the Delhi High Court alleging that cell phones were tapped by Pegasus software.

பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் விவாதப் பொருளாகி மாறியுள்ளது.

இதனால் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், பெகாசஸ் விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.

பெகாசஸ் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றசாட்டி வருகிறது.

இந்த நிலையில், பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வழக்கறிஞர் எம்எல் சர்மா வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட 300 பேரின் செல்போனை உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.