#Breaking:தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...!

Speaker of the Legislative Assembly Appavu has adjourned the Tamil Nadu budget session without specifying a date.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது, இதனையடுத்து,ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று வரை நடைபெற்றது.

23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.மேலும்,கடைசி நாளான இன்று காவல்துறைக்கு ஆணையம்,5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில்,தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும் சுமார் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.