சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..!

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன.

வேலை நிறுத்த போராட்டம்:

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி உச்சநீதிமன்றம் அதிகளவில் விற்பனையாக கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையில்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு  கோரி காலவரையற்றவேலைநிறுத்தபோராட்டத்தில்ஈடுபட உள்ளதாகதமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம்அறிவித்துள்ளது.

வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளனர்.