பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம் -பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்  முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில்  தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக

பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்  முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில்  தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இதனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார்.இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 3 கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ அப்போதுமுதல் அவர்கள் கவுன்டவுன் ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார்.