இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த அதிகாரி காவேரி மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்.
இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த அதிகாரியும், சென்னை, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் இணை ஆணையருமான திருமதி D. காவேரி அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்து சமய அறநிலையத் துறையின் மூத்த அதிகாரியும், சென்னை, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலின் இணை ஆணையருமான திருமதி D. காவேரி அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
தனக்கு அளித்த பணியை செவ்வனே செய்த சிறப்புக்குரியவர் திருமதி காவேரி அவர்கள். மனித நேயத்துடன் இறைப்பணியை மேற்கொண்டவர். திருமதி காவேரி அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node