சூடு பிடிக்கும் தமிழக அரசியல் ! சசிகலாவை நேரில் சந்தித்த சீமான்

Seeman who met Sasikala in person

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா.சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு இன்று தான் சசிகலா ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்தனர்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று அதிமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சசிகலாவை சந்தித்தது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சசிகலாவை அவரது இல்லத்தில் வைத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார்.