அதிமுக அலுவலகத்தை சீல் வைப்பதற்காக பூட்டுடன் வந்த சசிகலா ஆதரவாளர்..!

அதிமுக அலுவலகத்தை சீல் வைப்பதற்காக பூட்டுடன் வந்த சசிகலா ஆதரவாளரை எச்சரித்து அனுப்பி வைத்த காவல்துறை அதிகாரிகள்.

அதிமுக அலுவலகத்தை சீல் வைப்பதற்காக பூட்டுடன் வந்த சசிகலா ஆதரவாளரை எச்சரித்து அனுப்பி வைத்த காவல்துறை அதிகாரிகள்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டதனால் பெருபதற்றம் நிலவிய நிலையில்,தலைமை அலுவலகம் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர்.

அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர்.அதன்பின்னர்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும்,அதிமுக தலைமை அலுவலகம் பகுதியை சுற்றிலும் சட்டவிரோதமாக கூடக் கூடாது என145தடைஉத்தரவு கோட்டாட்சியாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சசிகலா ஆதரவாளர் ஒருவர், சசிகலா தன்னை அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்து விட்டு வருமாறு கூறி, பூட்டு மற்றும் சங்கிலியை கொடுத்துவிட்டதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

அதிமுக அலுவலகத்தை சீல் வைப்பதற்காக பூட்டுடன் வந்த சசிகலா ஆதரவாளர்..!