காங்கிரசிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்!

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மோதல் நடந்த விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் ரூபி மனோகரன். மோதல் சம்பவம் குறித்து விளக்கமளிக்க ரூபி மனோகரன் 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார், அதுவரை அவரை கட்சியில் இருந்து விலக்கி வைக்கிறோம் என ஒழுங்கு நடவடிக்கை குழு கூறியுள்ளது.

மேலும், மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரனின் எதிர்தரப்பான ரஞ்சன்குமார் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். மறுபக்கம், ரூபி மனோகரன் அளித்த கடிதத்தில் உள்ள விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

unknown node