"ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இவை கட்டாயம்" – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

"RT-PCR test is mandatory for those coming from Kerala from August 5" - Minister Ma. Subramanian ..!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 6 பேர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.மேலும்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால்,சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை மற்றும்,உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கீரினிங் மற்றும் ஆர்டிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்,13 நிமிடத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை முடிவு அளிக்கும் திட்டம் ஓரிரு நாட்களில் செயல்படுத்த உள்ளது.அதுமட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காகவே அதிக கூட்டம் கூடும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய அமைச்சர்,”வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்.அவ்வாறு,ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ய விரும்பாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம்.இந்த விதிமுறை இரயிலில் வருவோருக்கும் பொருந்தும்”,என்று தெரிவித்துள்ளார்.

"ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இவை கட்டாயம்" – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!