டெல்லி : குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், விரைவாக நோயைக் கண்டறிவதற்கும் இந்தியா தற்போது RT-PCR சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது. தற்போது, ஆப்பிரிக்கா நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் குரங்கு அம்மை தோற்று நோயை உலக சுகாதார நிறுவனம் (WHO) தனது 2-வது பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இந்த வைரஸ் பரவக்கூடிய ஒன்றாகவும் குறிப்பாக அதிக இறப்பு விகிதங்களையும் கொண்டுள்ளது. இதனால், உலகநாடுகள் இதற்கு முன்னேற்பாடாகப் பல தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதிலும், […]
கொரோனா பரவலுக்கு மத்தியில் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் “RT-PCR” பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விமான பயணத்துக்கு முன் “RT-PCR” சோதனை அறிக்கையை “Air Suvidha” இணையதளத்தில் பயணிகள் பதிவேற்ற செய்ய […]
தமிழக்தில் கொரோனாவை உறுதி செய்யும் ஆர்டி-பிசிஆர் ( RT – PCR) பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனை கட்டணம் குறைப்பு: அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ.400லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.700லிருந்து ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக […]
இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று புனே நகராட்சி அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மற்ற பகுதியிலிருந்து புனேவிற்கு வருபவர்கள் கட்டாயமாக 72 மணிநேரங்களுக்கு பிறகு கிடைக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தற்போது புனே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய […]
ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 6 பேர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.மேலும்,கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து […]
இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் செல்ல கொரோனா டெஸ்ட் சான்றிதழில் உள்ள QR கோட் அவசியம். பயணிகள் தாங்கள் செல்லும் நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி எதிர்மறை RT-PCR சோதனை அறிக்கையைதேவைப்படும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகளவில் பரவி பேரளிவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்தியாவில் உயிர்சேதங்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வரும் அணைத்து பயணிகள் விமானத்தையும் உலக நாடுகள் தடைசெய்து வருகிறது. […]
இமாச்சல பிரதேசத்தில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.500 க்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை நடத்த இமாச்சல பிரதேச அரசு அனுமதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும், மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், லேசான அறிகுறிகள் தெரிந்தாலே, மக்கள் அருகில் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில், […]
மகாராஷ்டிராவுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையைக் குறைத்துள்ளது. இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையை ரூ.900 மற்றும் ரூ .500 ஆக ஹரியானா அரசு குறைத்துள்ளது. இது, தொடர்பான உத்தரவை ஹரியானாவின் சுகாதாரதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் அரோரா வெளியிட்டார். இதற்கு, முன்னதாக ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் தனியார் ஆய்வகங்களில் விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் விலை ரூ .1,200 மற்றும் ரூ .650 […]
தமிழகத்திற்கு 1.50 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுக்க நடவடிக்கையாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக பல்வேறு தளர்வுகளை மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR கருவிகள் மூலம் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை, 2, 16, 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சோதனை கருவிகள் வாங்க […]