சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டுள்ளது. 4 சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர்கள் சிநேக ப்ரியா, ஜமான் ஜமால், பிருந்தா […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லை என நினைத்து அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷை கொலை முயற்சி, ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அதே மருத்துவமனையில் […]
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று வீடியோவை எடுத்து அண்மையில், சமூக வலைதளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் இர்ஃபான். இவ்விவகாரத்தில், இர்பான் மீதும் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீதும் நடவடிக்கை கோரி, சோமஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு […]
சென்னை : தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கபடுகின்றன. இந்த திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வழங்கபடுகின்றன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் (United Nation) அமைப்பு பாராட்டி விருது வழங்கியுள்ளது. இது […]
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துவிட்டது. மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்துள்ளது. இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்து கையிருப்பு இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த […]
புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 50ஐ கடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று அவர்கள் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள […]
நீட் தேர்வு : நடந்து முடிந்த நீட் தேர்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே என்பவருடைய தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட விவகாரம் பேசும்பொருளாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் என்பது மாபெரும் மோசடி என்று பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” நடந்து முடிந்த […]
பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பொருள் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பலவேறு பகுதிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் மஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. முறையான உரிமம் பெறும் வரை பஞ்சுமிட்டாய் விற்க கூடாது […]
தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைத்தனர். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மழை நின்றபிறகு இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாத காரணத்தால் மக்கள் அவதியில் இருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி […]
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள் ஆளாகினர். உண்ண உணவின்றி அருந்த தண்ணீரின்றி தவித்து வந்தனர். இப்பொது நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இந்த நிலையில், வெள்ளம் பாதிப்பு குறித்து நேற்றைய தினம் தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தூத்துக்குடி வருகை தந்தார். அங்கு, அரசு […]
பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன. 7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர். […]
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “கலகத்தலைவன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமார்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது தன் மகனின் “கலகத் தலைவன்” படம் பார்த்தீர்களா..? எப்படி இருக்கிறது..? என்று அமைச்சரிடம் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த […]
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கெட்டுப்போன சிக்கன்: அந்த வகையில்,நாகையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில்,310 கிலோ கெட்டுபோன சிக்கன் பறிமுதல் செய்தனர்.அதைப்போல,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை […]
வரும் நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்: பேரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. அடுத்த நிதியாண்டில் 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களை […]
2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். மேலும்,இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க , அரசுப் பள்ளி மாணவியர், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் […]
பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பொழுது, மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைப்பிடித்து பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் […]
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
சென்னை:ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்கிடையில்,பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசு,அதனை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனினும்,கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]