குடும்பத்திற்கு ரூ.4,000 கொரோனா நிவாரணம்- மு.க. ஸ்டாலின்..!

In the file that provides Rs. 4,000 as corona relief, the first is M.K. Stalin signed.

கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் முதலில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இன்று காலை ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், பின்னர் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

பின்னர், முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர். அதில், ஒன்றாக கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும்  கோப்பில் முதலில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு   இம்மாதம் வழங்க முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.