மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன்- நாளை தருகிறார் முதல்வர் ஸ்டாலின்!

Rs 3,000 crore loan for women's self-help groups - Chief Minister Stalin will give tomorrow!

திருவள்ளூர்:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாளை நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தில் சுமார் ஒரு கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.10,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.