அமோனியா பாய்லர் வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் – சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் நிறுவனத்தில் இன்று அமோனியா பாய்லர் வெடித்ததில், அங்கு பணிபுரிந்து வந்த அம்மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார், கணபதி, சவித்தா மற்றும் விசேஸ்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கா தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
unknown node