தமிழகத்துக்கு ரூ.183 கோடி நிதி விடுவிப்பு – மத்திய அரசு

Release of revenue shortfall funds for 17 states including Tamil Nadu, Andhra Pradesh, Kerala, Karnataka, Meghalaya and Assam.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேகாலயா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதி விடுவிப்பு.

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 5வது தவணை மூலம் ரூ.183.67 கோடியும், மொத்தமாக ரூ.918.33 கோடி கிடைத்துள்ளது.

2021-22ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 5வது மாதத்தவனை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி மானியம் வழங்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேகாலயா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.