சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர்,துணை குடியரசு தலைவர்,பிரதமர் நேரில் அஞ்சலி

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.இவருக்கு வயது 67 ஆகும்.நேற்று இரவு  உடல்நலக்குறைவு காரணமாக  சுஷ்மா  சுவராஜ்  டெல்லியில் உள்ள

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.இவருக்கு வயது 67 ஆகும்.நேற்று இரவு  உடல்நலக்குறைவு காரணமாக  சுஷ்மா  சுவராஜ்  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சுஷ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.நேற்று இரவு திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும்  பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர்,துணை குடியரசு தலைவர்,பிரதமர் நேரில் அஞ்சலி