திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்..!

At Anna Arivalayam, Rajini People's Forum executives joined the DMK led by MK Stalin.

அண்ணா அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது  ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.