தடை...எதிர்த்து ராஜபச்சே மேல்முறையீடு.!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் 30 வருடங்களாக  இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு கடந்த2000 ஆண்டு இங்கிலாந்து அரசு தடை விதித்தது.

இத்தடையை எதிர்த்து  விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம்  சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பி.ஓ.ஏ.சி எனப்படும் மேல்முறையீட்டு கமிஷனில் மேல்முறையீடு செய்தது.

இம்மேல்முறையீட்டை விசாரித்து வந்த பி.ஓ.ஏ.சி., விடுதலைப்புலிகள் மீதான தடையை நேற்று முன்தினம் நீக்கி  உத்தரவிட்டது.

இந்நிலையில் பி.ஓ.ஏ.சி.யின் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து அதே கமிஷனில் இலங்கை  மேல்முறையீடு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.