2020, 2021 கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டன. சில பெரும் நாடுகளின் பொருளாதாரங்கள் கூட சற்று அதிர்வை கண்டது. இந்த பொருளாதார ரீதியிலான சிக்கலில் சிக்கி அடுத்தடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறியது. பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் அதிகரித்து , அதன் இறக்குமதி குறைந்து விலைவாசி உச்சம் தொட்டது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயம் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் […]
மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம். மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச இருவரும் வரும் 28-ஆம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு ராஜபக்சக்களும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அரசைக் கண்டித்து கடும் போராட்டம் நிலவி வரும் நிலையில்,நேற்று முன்தினம் தனது பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.பின்னர்,அவரது மாளிகையில் தங்கியிருந்தபோது, அரசுக்கு எதிரானவர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும்,அவரது மாளிகையின் உள்ளே நுழைய முயற்சியும் செய்த ஆர்பாட்டக்காரர்களால் நுழைய முடியவில்லை.இதனால்,அங்கிருந்து நேற்று அதிகாலை ராஜபக்சே வெளியேறி,தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. […]
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம். இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் வன்முறைக்கு ஐ.நா. மனித […]
ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று பொதுமக்கள் முழக்கம். இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ளதால் அங்கு மக்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைக்கு மத்தியில் வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டமிட்டு இருப்பதால், பொதுமக்கள் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற கூடாது என மக்கள் முழக்கமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று தனது […]
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த சூழலில்,இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், […]
இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம். இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்திருந்தார். […]
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதாக தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் காரணமாக, அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. ராஜபக்சே ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் […]
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர்தான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கையில் […]
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட உள்ள பிரதமரின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் என தகவல். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்தா ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாதம் காலமாக மக்கள் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் ராஜபக்சவுக்கு பதில் புதிய பிரதமரை நியமிக்கவும், இலங்கையில் புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும் […]
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நான்கு புதிய அமைச்சர்களை அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் கோபம்: பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளன மற்றும் வாழ வழியில்லாத சூழல் மக்களிடையே வேதனையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்த கோபம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்,மாபெரும் போராட்டத்தை […]
இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாக்களை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார். இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாவை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொணடார். அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்குமாறு திபர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து கட்சிகளின் சார்பில் அமைச்சக பதவியை ஏற்று நெருக்கடியை தீர்க்க முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சிகள் அடங்கிய காபந்து அரசை […]
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை எதிர்த்து இலங்கை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. அண்டை நாடான இலங்கையில் 30 வருடங்களாக இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு கடந்த2000 ஆண்டு இங்கிலாந்து அரசு தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பி.ஓ.ஏ.சி எனப்படும் மேல்முறையீட்டு கமிஷனில் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டை விசாரித்து வந்த பி.ஓ.ஏ.சி., விடுதலைப்புலிகள் மீதான தடையை நேற்று முன்தினம் நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பி.ஓ.ஏ.சி.யின் […]
இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்புகளும் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை பரப்பிக்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து, அதன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார். பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக புதிய பதவிக்கு பதவியேற்றார்.இதனிடையே இந்தியா மற்றும் இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற நிலையில் இந்திய பிரதமர் மோடி பேசுகையில் , ராஜபக்சே அரசாங்கத்தின் கொள்கைகளின் ஆதரவுடன் இலங்கையில் ஆளும் கட்சியின் […]
நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி வந்தது. ரஜினிகாந்திற்கு இலங்கை விசா மறுப்பு என்பது வதந்தியே என்று மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் இருந்தனர்.அந்த சமயத்தில் ,இலங்கை வடக்கு மாகாண முதல்வர் […]
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார். இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பொதுஜன கட்சியின் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.பின்னர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற நிலையில் அதிபராக பதவியேற்றார். இதனால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார் ரணில் விக்ரமசிங்கே. பின்பு இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று இலங்கை […]
உச்சக்கட்ட குழப்பத்தில் இலங்கை தத்தளித்து வருகிறது.நாட்டில் குழப்பத்தை உருவாக்கியதற்கு கடும் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்நிலையில் திடீரென்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை முடக்கினார் அதிபர் சிறிசேனே இந்த முடக்கம் பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக இந்த முடக்கம் என்றும் இதனிடையே முடக்கப்பட்ட நாடாளுமன்றம் வரும் 16ம் தேதி வரை முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் […]
இலங்கை நாடாளுமன்ற அவசரகூட்டத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது இந்த கூட்டணி 3 வருட ஆட்சியை இலங்கையில் நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் […]