உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது என ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மாணவர் நவீன் உயிரிழப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர்களின் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் “உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கள். இந்திய மாணவர்களை மீட்டு விரிவான திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்பதில் ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது என பதிவிட்டுள்ளார்.
unknown node