தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றம்? – ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் சந்திப்பு!

It has been reported that Purohit is likely to be replaced by Tamil Nadu Governor Banwar.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை ஆளுநர் சந்திக்க உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்தும் பெறுகிறது.

மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும்  ஆலோசிக்கப்படலாம். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தமிழக ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.