PM CARES-லிருந்து 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் – பிரதமர் மோடி அனுமதி

Decision to purchase 1 lakh portable oxygen concentrators from BM Cars Fund at a high-level meeting chaired by Prime Minister Modi.

பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூடத்தில் முடிவு.

நாடு முழுவதும் கொரோனா தொற்றியின் இரண்டாவது அலை தீவிரம் காரணமாக கடுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் அதிவேக தேவை காரணமாக, பிரதமர் மோடி தலைமயில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ) விநியோகத்தை மேம்படுத்துவதற்கு, பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 1 லட்சம் போர்ட்டபிள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க பிரதமர் மோடி அனுமதி வழங்கி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விரைவாக வாங்க வேண்டும் என்றும் அதிக தட்டுப்பாடுகளை கொண்ட மாநிலங்களில் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், பி.எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் முன்னர் அனுமதிக்கப்பட்ட 713 பி.எஸ்.ஏ ஆலைகளுக்கு கூடுதலாக, 500 புதிய பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பி.எஸ்.ஏ) ஆக்ஸிஜன் ஆலைகள் பி.எம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.ஏ ஆலைகள் மாவட்ட தலைமையகம் மற்றும் 2 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். இந்த 500 பிஎஸ்ஏ ஆலைகள் டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் உருவாக்கிய உள்நாட்டு தொழில்நுட்பத்தை, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மாற்றுவதன் மூலம் நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.