சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம் ! பிரதமர் மோடி வரும் அதே நாளில் ராகுல் காந்தி வருகை

Prime Minister Modi and Rahul Gandhi visit on the 14th

இரண்டாம் கட்ட பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகின்ற 14-ஆம் தேதி தமிழகம் வர உள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.ஏற்கனவே ராகுல் காந்தி வந்த நாளில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்தார்.

பின் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.இந்நிலையில்தமிழ்நாட்டில் வரும் 14,15,16 ஆகிய தேதிகளில்ராகுல்காந்தி இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகின்ற 14-ஆம்  பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.பிரதமர் பயணம் மேற்கொள்ளும் அதே நாளில் ராகுல் காந்தி வருகிறார்.இரு முக்கிய தலைவர்களும் தமிழகத்திற்கு வருவது முக்க்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.