பொங்கல் பரிசுத் தொகுப்பு புகார்;முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

Pongal Special package Complaint; Chief Minister Stalin's important advice today!

சென்னை:பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில்,உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகம் முழுவதும்,பொங்கலை முன்னிட்டு அரிசி,வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் 95 சதவிகித குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.இருப்பினும்,இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து,பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில்,இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின்,இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை  எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.