அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம்

PM Modi to visit Assam & West Bengal today

இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காலை அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.அங்குள்ள  தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் பிரதமர் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.இந்நிகழ்ச்சியின் போது பொறியியல் கல்லூரிகளைத் திறந்து வைக்கிறார். பின் மாலை மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

அம்மாநிலத்தில் உள்ள ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது கிழக்கு இந்தியாவின் ஹவுரா பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.