பெட்ரோல் விலை குறைப்பு : தீபாவளி பரிசு அல்ல; வெறும் கண் துடைப்பு – மம்தா பானர்ஜி!

Reducing petrol prices is not a Diwali gift; West Bengal Chief Minister Mamata Banerjee has said it was just an eye-wipe.

பெட்ரோல் விலை குறைப்பு தீபாவளி பரிசு அல்ல; வெறும் கண் துடைப்பு தான் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டு இருந்தது. இதனுடன் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 5.82 ரூபாயும் டீசல் 11.77 ரூபாயும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், ஏற்கனவே விண்ணைத் தொட்டுவிட்ட பெட்ரோல்,டீசல் விலை நிலவரத்தில் மத்திய அரசு கலால் வரி குறைப்பு தீபாவளி பரிசு என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் தானே தவிர வேறொன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோலிய பொருட்களுக்கு அடிப்படையான விலை குறைப்பு செய்வதே சரியான விலை குறைப்பு எனவும், இப்போது செய்திருக்கக்கூடிய விலை குறைப்பு அறிவிப்பு வெறும் கண்துடைப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.