மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் அறிமுகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Health Minister Ma Subramaniam has said that a program called 'Searching for People' will be launched in 15 days.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 15 நாட்களில் தொடங்க இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அமல்படுத்துவார். நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கப்படும். இத்திட்டத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் வீடு தேடி மருந்துகள் வரும் என்றார்.

மேலும் இந்த திட்டம் 15 நாட்களில் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 20 லட்சம் நீரழிவு, ரத்த அழுத்தம் உடைய பொது மக்களுக்கு வீடு தேடிச் சென்று மாத்திரைகள் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.