அரசு பொது மருத்துவமனையில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவு. மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந் 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிந்ததை அடுத்து 4 அரசு மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட […]
அதிமுக, பாஜக நீட் தேர்வு தொடர்பாக நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்பின்னர் நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான […]
பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றசாட்டு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் எனவும் குற்றசாட்டியுள்ளார். தரமற்ற முகக்கவசம் விநியோகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தரமான இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனியாரில் இலவச தடுப்பூசி […]
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 15 நாட்களில் தொடங்க இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அமல்படுத்துவார். நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கப்படும். இத்திட்டத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் வீடு தேடி மருந்துகள் வரும் என்றார். மேலும் இந்த திட்டம் 15 நாட்களில் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 20 லட்சம் […]