கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் வரவேண்டாம் – அங்காடி நிர்வாகக்குழு அறிவிப்பு

Coimbatore Store Management Committee announces that the public will be able to purchase essential items at the shops near their homes.

பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் வாங்குமாறு கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக தகவல் வெளியான நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அங்காடி நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. சந்தைக்குள் நெரிசலைத் தடுக்க, பொதுமக்களுக்குத் வரவேண்டாம் என்றும் தேவையான பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் வாங்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். மேலும், தனியார் பயணிகள் காய்கறி வாங்க ஆட்டோ, கார், வேனில் வர அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

unknown node