சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் […]
பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் வாங்குமாறு கோயம்பேடு அங்காடி நிர்வாகக்குழு அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருவதாக தகவல் வெளியான நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து […]
கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதாகவும், பண்டிகை காலத்தில் கொரோனா […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. அதற்கு மாறாக திருமழிசையில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், 147 நாட்களுக்கு பிறகு சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டது. அதன்படி, இரவு 8 மணியில் இருந்து […]
கோயம்பேடு சந்தையை திறப்பதற்கான தேதி, இன்றிரவு அறிவிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதால், கோயம்பேடு மார்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர். […]
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, தற்போது திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் , இங்கு போதுமான வசதி இல்லை எனவும் கூறி மீண்டும் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தையை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, தற்போது திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் , இங்கு போதுமான வசதி இல்லை எனவும் கூறி மீண்டும் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இன்று காலை 11 மணிக்கு நேரில் […]
கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வந்தது.இதனால் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கனி சந்தை திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையை திறக்க கோரி, வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் திங்கள் கிழமை […]
கோயம்பேடு வியாபாரிகளுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு கொரோனா பரவி வருகிறது.அதுமட்டும் அல்லாமல் கோயம்பேடு சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால் கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கோயம்பேட்டில் வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. […]
கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது . சென்னை, கோவை ,மதுரை,திருப்பூர்,சேலம் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.எனவே இதற்கு முன் கோயம்பேடு சந்தையில் அதிகமான மக்கள் வந்து காய்கறிகள் வாங்கினர்.இதனால் தனிநபர் இடைவெளி பின்பற்றப் படாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக தான் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது .இதனால்தான் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே. […]
கோயம்பேட்டில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளுக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு இன்று காலை 7.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் […]
கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளுக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் காய்கறி வாங்க வருபவர்களுக்கு […]
சென்னை கோயம்பேடு சந்தை நாளை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இதற்குஇடையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் விடுமுறை என்றும் அன்று காய்கறி சந்தைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது […]