“தமிழத்தில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை மலர வைப்பதே எங்கள் இலக்கு” என்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. அதனையொட்டி தற்போது புதிதாக இளைஞர் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மீண்டு மலர வைப்பதே இளைஞர் அணியின் இலக்கு என்று கூறியுள்ளார்.அதற்காக இரவுபகல்பாராது அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கு இந்த பதவி கிடைத்தது பெருமையாகவும் ஒருபக்கம் மலைப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது வாழ்வில் விமரச்சனம் என்பது உரம் போன்றது என்றும் செயல்பாட்டின் மூலம் விமர்ச்சனங்களை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.