இப்படி இல்லையென்றால் அடுத்த முறை 25 சீட்டு கூட கிடைக்காது – ப.சிதம்பரம்

Former minister P. Chidambaram has said that there is no cooperation with the Congress party in the Karaikudi constituency.

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், கட்சி என்றால் கடமை உணர்வுடன் செயல்படவேண்டும், இல்லாவிடில் அடுத்தமுறை 25 இடங்கள் கூட கிடைக்காது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை. புதுவயல் பூத் கமிட்டி கூட்டத்துக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அதிக பேர் வராததால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் ஒத்துழைப்பு இல்லை, காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.