பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய ஓபிஎஸ்..!

இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தின் மூலம் மக்கள் மீதான பிரதமரின் அன்பு, கருணை, அக்கறை வெளிப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

unknown node