ஓபிஎஸ் மனைவி மறைவு;"பிரிவைத் தாங்கும் மனவலிமை " -முன்னாள் அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல்..!

OPS wife's death; "mental strength to endure the division" - Former Minister Pon.Radhakrishnan

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இதனையடுத்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்,அதிமுக கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதன்பின்னர்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும்,இரங்கல் தெரிவித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“முன்னாள் முதல்வர்,அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் O. பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி. விஜயலஷ்மி அம்மையார் உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று திடீரென மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையத் தரவும், அன்னாரின் ஆன்மா நற்கதியடையவும் எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்”,என்று தெரிவித்துள்ளார்.

unknown node