ஆன்லைன் ரம்மி – ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்...!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை.

ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.