உ.பி.யின் கான்பூரில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி,இரண்டு பேர் காயம்

One killed, two injured in cylinder explosion at oxygen plant in Kanpur, Uttar Pradesh

உத்தரபிரதேச கான்பூரில் உள்ள பங்கி ஆக்ஸிஜன் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை நிரப்பப்பட்டபோது ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு , இரண்டு பேர் காயம்.தாதா நகர் தொழில்துறை பகுதியில் இந்த  சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆக்ஸிஜன் சிலிண்டர் மறு நிரப்பலின் போது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் ஆக்ஸிஜன் ஆலை தொழிலாளி இம்ராட் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஒருவர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்த மற்றொருவர் மருத்துவ உதவி அளித்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.