அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு – ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியின்றி தேர்வு!

OBS and EPS have been selected without contest as the nominations for AIADMK coordinators have been completed.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளர் அதிகாரம் கொடுக்கப்படுவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும், எட்டாம் தேதி அதன் முடிவு அறிவிக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்திருந்தது .

அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.