வேட்புமனு பரிசீலனையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருடனான ஆலோசனையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆணையர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக, முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வேட்புமனு பரிசீலனையில் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு […]
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட 252 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளர் அதிகாரம் கொடுக்கப்படுவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும்,அதன் முடிவு 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்திருந்தது . அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுச்செயலாளர் அதிகாரம் கொடுக்கப்படுவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி நடைபெறும் எனவும், எட்டாம் தேதி அதன் முடிவு அறிவிக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்திருந்தது . அதன்படி ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 […]
திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி , திருச்சி சிவா, முன்னாள் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.