திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!!

Mahendran, who has joined the DMK, has been given the responsibility as the Joint Secretary of the Information Technology Team.

திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்தரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், கழக சட்டத்திட விதி 31-பிரிவு, 19ன் படி திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக ஆர்.மகேந்தரன் எம்பிபிஎஸ்., எம்டி தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

unknown node