புதிய கல்வி கொள்கை – மே 17ல் மத்திய அரசு ஆலோசனை.!

The federal government is reportedly set to consult on May 17 on the implementation of the new education policy.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்.

மத்திய அரசு, நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெயிட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.