"கொரோனாவுக்கு குட்பை...உங்களுக்கு சேவை புரிய வந்துவிட்டேன்" – அரவிந்த் கெஜ்ரிவால்!

New Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal has recovered from a corona infection.

டெல்லி:கொரோனா தொற்றில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.லேசான அறிகுறிகள் உள்ளதால் அவர் வீட்டிலேயே  தனிப்படுத்திக் கொண்டிருந்தார்.இதுகுறித்து,கடந்த ஜனவரி 4 ஆம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘எனக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியானது.லேசான அறிகுறிகள் உள்ளது எனவே, வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.கடந்த சில நாட்களாக என்னைத் தொடர்பு கொண்டவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு,சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’, என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைந்து விட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இது குறித்து,தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறுகையில்:

“கொரோனா தொற்றிலிருந்து இருந்து மீண்டு உங்களுக்கு சேவை புரிய வந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node