9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும்,உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.வரும் 22 ஆம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.அதன்பின்னர்,23-ந் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,திமுக,அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி,உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி,முதற்கட்டமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கான 92 வேட்பாளர்களை வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டுள்ளார்.இதனையடுத்து,மீதமுள்ள 4 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
unknown node