மேலும் புதிய தளர்வு..,முதல்வர் நாளை ஆலோசனை...!

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை.

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை.

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். மேலும், தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவினருடனும் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ஆம் தேதியுடன் முடியும் நிலையில், முதல்வர் ஆலோசனையில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.