முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்புக்கு பின்னர் ஆளுநர் பன்வாரிலால் அளித்த தேநீர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய உயரதிகாரிகள், எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அவை தலைவர் தனபால் மற்றும் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் ஆளுநர் பன்வாரிலால் தேநீர் விருந்து அளித்தார்.
அப்போது, முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் அதிமுகவின் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனபால், மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்தினர். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே முதல்வர் மட்டும் அமைச்சர்கள் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
unknown node