முன் ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜூ உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Minister Kadampur Raju has filed a petition in the Chennai High Court seeking bail on a complaint of intimidation of an officer.

அதிகாரியை மிரட்டிய புகாரில், அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த 12ம் தேதி ஊத்துபட்டி அருகே கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தனது வாகனத்தை மறித்து அடிக்கடி சோதனைவிடுவதாகவும் விசாரணை நடத்துவதாகவும் கூறிய அமைச்சர் பறக்கும்படை அதிகாரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி நாலாட்டின்புத்துார் போலீசில் புகார் அளித்தார். சிவகாசியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான மாரிமுத்துவிடம் தேர்தல் கண்காணிப்பு உயர் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்ட பின்னர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வாகன சோதனைக்கு ஒத்துழைக்காமல் பறக்கும்படை அதிகாரியை மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன் ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜூ உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!