அதிகாரியை மிரட்டிய புகாரில், அமைச்சர் கடம்பூர் ராஜு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த 12ம் தேதி ஊத்துபட்டி அருகே கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தனது வாகனத்தை மறித்து அடிக்கடி சோதனைவிடுவதாகவும் விசாரணை நடத்துவதாகவும் கூறிய அமைச்சர் பறக்கும்படை அதிகாரியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி நாலாட்டின்புத்துார் போலீசில் புகார் அளித்தார். சிவகாசியை சேர்ந்த […]
அடுத்தவர்களின் பிளவை பயன்படுத்தி ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முதல்வர் பழனிசாமி அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். திமுக தலைவர் முக ஸ்டாலின் சினிமா செட்டிங் போன்ற கூட்டங்களை நடத்துகிறார். அவரை சந்திக்க முடியாமல் திமுகவினரே நொந்து போயுள்ளனர் என கூறியுள்ளார். சட்டமன்ற […]
திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.இதன் பின் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வந்த ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் […]
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க அமைச்சர் கடம்பூர் ராஜூ கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடந்து, தியோட்டர் , விளையாட்டு மைதானம், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன.நேற்று மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து, மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை, தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், தியோட்டர், […]