ராயபுரம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் விருப்ப மனு

Minister Jayakumar's petition to contest in Rayapuram constituency

ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில், ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5,000 மற்றும் கேரளாவில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும்,தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் போட்டியிட இன்று விருப்பமனு அளித்தனர்.மேலும் மூத்த அமைச்சர்களும் விருப்பமனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.